12/27/2012

சச்சின்...Flow Chart

சச்சின் - கிரிக்கெட் கடவுள்...  சச்சின் - சாதனைகளின் மன்னன்...சமீபத்தில், தான் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் . பல விமர்சனங்களுக்கு ஆளான அவர் இம்முடிவை எடுத்துள்ளார்.

மக்கள் மனதில் சச்சினை பற்றிய விஷயம் கீழே படத்தில்...


ஆம். மேட்சில் என்ன நடந்தாலும் சச்சின் பற்றிய கருத்து ஒன்று தான். அவர் வெளியேற வேண்டும், இளம் வீர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அது மட்டுமே.

ஒரு வழியா வெளியேறிவிட்டார். இனி சச்சின் அல்லாத இந்திய அணியின் செயல்பாட்டை பார்போம்.

12/14/2012

மாயன் காலண்டர் VS 2013 காலண்டர்

                     VSஇன்று காலை நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது,

நண்பர்: என்ன மச்சி, இன்னும் 9 நாள் தான் இருக்கு உலகம் அழியுரதுக்கு. என்ன பண்ண போற?

நான்: நீ என்ன பண்ணலாம்னு சொல்லு பண்ணிடலாம்?

நண்பர்: விளையாடாத மச்சி. நான் சீரியசா கேக்குறேன்.

நான்: அப்படியா ? சரி,  நான் சீரியசா கேக்குறேன் உலகம் அழியபோதுன்னு நீ நம்புறியா ?

நண்பர்: முக்கால்வாசி உலகமே நம்புது, நான் மட்டும் நம்பாம இருக்க முடியுமா?

நான்: அப்ப நீ நம்புற?

நண்பர்: ஆம்.

நான்: சரி உனக்கும் எனக்கும் ஒரு பந்தயம். நீ நம்புற மாதிரி உலகம் அழிஞ்சா என் அடுத்த மாசம் சம்பளம் உன்னோடது. அழியாம இருந்த உன் சம்பளம் என்னுது. என்ன ஓக்கேயா?

நண்பர்: எத்தனை பேர் டா இப்படி கெளம்பி இருக்கீங்க?

 ******************************************************************************

செய்தி: 2013 காலண்டர் உற்பத்தி மற்றும் விற்பனை மந்தமாகவே உள்ளது.

 ******************************************************************************

சரி, இப்ப சொல்றேன், டிசம்பர் 22-ல உலகம் அழியாது. அப்படி அழிஞ்சா என் சொத்த எழுதி தரேன். அழியாட்டி ஒரு பவுண் தங்க காசு குடுத்துடுங்க.

பந்தயத்துக்கு யாரு ரெடி???????????